நான்கு வழிச்சாலை விபத்தில் ஒருவர் பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் கச்சராயன்பட்டி அருகே காளாப்பூரை சேர்ந்த பூமிநாதன்(50), மகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நேற்று(செப்.29) சென்று கொண்டிருந்தனர். கச்சிராயன்பட்டி அருகே சட்டென நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தை திருப்பியபோது சென்னையிலிருந்து மதுரையை நோக்கிச் சென்ற பார்ச்சூனர் கார் இவர்கள் மீது மோத, சம்பவ இடத்திலேயே பூமிநாதன் பலியானார். மகேந்திரன் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி