ஆவின் குறித்து வீடியோக்களை வெளியிட்ட அலுவலர் சஸ்பென்ட்

ஆவின் பால் பண்ணையில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக விரிவாக்க அலுவலர் ஜான் ஜஸ்டின் தேவ சகாயம் சில வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.

இது போன்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தனக்கான ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற புகார்கள் தொடர்பாக பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர்களுக்கு மீதான நடவடிக்கை எடுக்காமல் இது போன்ற முறைகேடுகளை வெளிக் கொண்டுவந்த என் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில் பழைய வீடியோக்களை தற்போது திட்டமிட்டு பரப்பி ஆவின் நற்பெருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஆவின் விரிவாக்க அலுவலர் ஜான் ஜஸ்டின் தேவ சகாயத்தை மதுரை ஆவின் நிர்வாகம் நேற்று(செப்.3) சஸ்பென்ட் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி