மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சுந்தர வடிவேல் என்பவர் முறையீடு செய்தார். கடைசி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு அனுமதி அளித்துள்ளது. 144 தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்வதை தடுக்கக் கூடாது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.