மதுரை: நண்பனை அடித்துக் கொடூர கொலை; நீதிபதி பரபரப்பு உத்தரவு

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். அவருடைய நண்பன் சச்சிதானந்தம். இருவரும் நண்பர்கள். இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு மது அருந்திக் கொண்டிருந்தபோது பூமிநாதனின் தாயாரை சச்சிதானந்தம் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூமிநாதன் நண்பன் சச்சிதானந்தத்தை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக நேற்று மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்றத் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பூமிநாதனுக்கு ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி