மது போதையில் தொழிலாளி உயிரிழப்பு.. தேனியில் சோகம்

தேனி நகர் கம்போஸ்ட் ஓடைத் தெருவைச் சேர்ந்த செந்தில்(40) என்ற சுமை தூக்கும் தொழிலாளி, மது போதைக்கு அடிமையானவர். இவர் திங்கள்கிழமை நேருசிலை பின்புறம் உள்ள ஓட்டல் அருகே சடலமாக கிடந்தார். அவரது சித்தப்பா மகனான செல்வம் அளித்த புகாரின் பேரில், தேனி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் இல்லாததால் செந்தில் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி