தேனி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம், தேவாரம் அருகே தே.சிந்தலைச்சேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (38) வியாழக்கிழமை விஷம் குடித்து உயிரிழந்தார். குடிப் பழக்கத்தால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தேவாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி