கம்பம் பகுதியைச் சேர்ந்த கருத்தம்மாள் என்பவரின் மகன், செல்வியின் மகனை கொலை செய்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக, செல்வி மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பெண்கள் கருத்தம்மாளின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் செல்வியை கைது செய்துள்ளனர்.