இதன் தொடர்ச்சியாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 105 அடிக்கு மேல் நிரம்பி வரும் தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு செல்ல மதகு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதகு தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகை திறந்து வைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கம்பம் பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு