உத்தமபாளையம்: கருணாநிதி பிறந்த நாள் விழா

இன்று தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி ஆகிய ஊர்களில் கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இதேபோன்று தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னாஓவுலாபுரத்தில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோருக்கும் தூய்மைப் பணியாளருக்கும் சேலை மற்றும் இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி