தேனி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்.. இளைஞர் கைது

தேனி மாவட்டம், தேவாரம் நாடார் வடக்குத் தெருவைச் சேர்ந்த சித்ராதேவி (45) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார் (23) என்பவர் வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். சித்ராதேவி சத்தம்போடவே, அவரது கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சித்ராதேவி அளித்த புகாரின் பேரில், தேவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஸ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி