தேனி: கண்மாயில் விழுந்து தொழிலாளி பலி

போடியில் கண்மாய் கரையில் தவறி விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். தேனி மாவட்டம், போடி தேவாலயத் தெருவைச் சேர்ந்த ரூபன் (42) என்பவர் மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய் கரையில் நடந்து சென்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி