தேனியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் இளங்கோவன் (50) என்பவருக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகையாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.