உலக அளவில் வாழும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈதுல் அல்ஹா என்னும் பக்ரீத் பண்டிகை ஒன்று. ஒவ்வொரு முஸ்லிமும் இயன்றவரை பிறருக்கு உதவவேண்டும், என்ற உயரிய நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணமும் இந்த மாதத்தில் நடைபெற்று, அங்கு அவர்கள் தங்களின் தொழுகை கடமையை நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பக்ரீத் தொழுகை முடிந்த பிறகு பணவதிபடைத்தவர்கள் தாங்கள் வளர்த்திவந்த ஆடு, மாடுகளை பலியிட்டு உறவினர்களுக்கும், வசதி இல்லாத சக சமூக மக்களுக்கும் வழங்குவார்கள். பொருளாதாரத்தில் நடுத்தரமான மக்கள் நான்கு அல்லது அதற்கும் மேலும் கூட்டாக சேர்ந்து கூட்டுக் குர்பானி என்ற பெயரில் அனைவருக்கும் உதவுவார்கள்.
இந்த நிலையில் கம்பம் மெட்டு சாலை பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.