கம்பத்தில் ராணுவ வீரருக்கு கத்திக்குத்து

கம்பம் நெல்லுகுத்தி புளியமரம் பகுதியைச் சேர்ந்த இராணுவத்தில் பணிபுரிந்து விடுமுறைக்கு வந்த சரவணன் என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டுச் சென்றனர். இச்சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கம்பம் தெற்கு காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணனை மீட்டு, கம்பம் GH-இல் சேர்த்தனர். சம்பவம் குறித்து தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி