கூடலூர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை

கூடலூரில் விவசாய சங்கங்கள் சார்பாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தேனி மாவட்டம் கூடலூரில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெயை தடை செய்து விட்டு பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பாக கூடலூர் கூட்டுறவு வங்கி முன் அரசியல் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கூடலூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி