தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.