தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தேக்கடியைச் சேர்ந்தவர் விஷ்ணு. சொந்தமாக லோடு ஆட்டோ வைத்திருந்தார். இரவில் தேக்கடியில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்வளத்துறை அலுவலகம் அருகே ரோட்டின் ஓரத்தில் நிறுத்துவது வழக்கம். அதிகாலை ஆட்டோ தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.
தீயை அணைக்க முயற்சி செய்தபோது முழுவதும் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்களின் முன்பகுதியில் பணம் வைக்கும் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது.
குமுளி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தமிழக நீர்வளத்துறையினரால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மாயமானது குறிப்பிடத்தக்கது.