தேனி மாவட்டம், உப்புக்கோட்டை கிளை நூலகத்தில் புரவலர்கள் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தன்னார்வலரும் வழக்கறிஞருமான பிரபாகரன் நூலகத்தில் தன்னை புரவலராக இணைத்துக் கொண்டார். இதற்கு கிளை நூலக வாசகர் வட்டாரத்தின் சார்பாக நூலகர் சந்திரசேகரன் நூலக அடையாள அட்டையை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.