தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் முத்தையா (56) இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் முத்தையா படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்