கம்பம் அருகே புளிய மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே க. புதுப்பட்டியை சேர்ந்தவர் நாகேஸ்வரன் (40). இவர் புளிய மரத்திலிருந்து புளி பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் அனுமந்தன்பட்டியிலுள்ள புளியந்தோப்பில் புளி பறிக்கும் வேலை செய்தபோது மரத்திலிருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி