குமுளி: 600 லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது

குமுளி காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த செல்வம் (65) என்பவரிடம் சோதனை செய்ததில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் 600-ஐ விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி