கம்பம் கே.கே. பட்டியில் நேற்று (ஜூலை 31) மாலை நடைபெற்ற அன்பு டான்யாவின் 'அப்பா' சிறுகதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நூலை வெளியிட, கே.கே. பட்டி சேர்மன் வேல்முருகன் மற்றும் இரண்டாவது வின்னர் அலீம் பெற்றுக்கொண்டனர். தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவை வேல்கணேஷ் மற்றும் ஈஸ்வரன் ஏற்பாடு செய்தனர்.