கூடலூர் சட்ட விரோதமாக பதுக்கிய சந்தன மரக் கட்டைகள் பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழகூடலூர் அண்ணா நகர் கம்போஸ்ட் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தலைமையிலான வனத்துறையினர். கீழ கூடலூர் கம்போஸ்ட் தெருவில் உள்ள பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர், அப்போது இரண்டு சாக்கு பைகளில் சந்தனமர கட்டைகளை வெட்டி வைத்து பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மரக் கட்டைகளை போலீசார் துணையுடன் கைப்பற்றிய வனத்துறையினர். சந்தன மர கட்டைகள் பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான பாஸ்கரன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட சந்தன மரங்களை எந்த வனப்பகுதியில் வெட்டி கொண்டு வந்து வீட்டில் பதுக்கி உள்ளார்கள், இந்த குற்ற சம்பவத்தில் எத்தனை நபர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்கள், வேறெங்கும் சந்தன மர கட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதா, இந்த குற்ற சம்பவத்தில் எத்தனை நபர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்கள், என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி