கூடலூா்: 35 கிலோ கஞ்சா கடத்தல்.. 3 பேர் கைது

கூடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். குமுளி காவல் உதவி ஆய்வாளா் சூா்யதிலகராணி தலைமையில், போலீஸாா் லோயா்கேம்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை சோதனையிட்டதில் 35 கிலோ கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. செல்வி (47), முனியசாமி(36), பாலசுப்பிரமணி (38) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொடர்புடைய செய்தி