தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் செல்வேந்திரன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேனி மாவட்ட தலைவராக உள்ளார். இவரது தாயாரும், கூடலூர் முன்னாள் தி. மு. க நகரச் செயலாளர் சின்னாத்தேவர் மனைவியுமான அமராவதி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி, துக்கம் விசாரிக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூடலூரில் உள்ள செல்வேந்திரன் வீட்டுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த அமராவதி அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அதன் பின்னர் செல்வேந்திரன் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தார்.
நிகழ்ச்சியின் போது அவருடன், முன்னாள் எம். எல். ஏ
கம்பம் ஓ. ஆர் ராமச்சந்திரன், த. மா. கா வடக்கு மாவட்ட தலைவர்
எம். ஆர். மகேந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் கொடியரசன்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
ஓ. ஆர். குமரேசன், சின்ன கவுண்டர் ராஜசேகர்,
வட்டாரத் தலைவர்கள் சுரேஷ்குமார், அன்பழகன், மாவட்ட இளைஞரணி அருண்குமார், காண்டீபன், கம்பம் நகரச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.