கோயில் பூட்டை உடைத்து திருட்டு நான்கு பேர் கைது

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கௌமாரி மாரியம்மன் கோவில் மற்றும் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை அருகில் உள்ள சரவணன் என்பவர் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்தும், கோயில் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜெயமங்கலம் மேற்குத்தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் ராஜபாண்டி, கிருஷ்ணசாமி மகன் சூர்யா, கிருஷ்ணசாமி மகன் நிதிஷ், கிருஷ்ணசாமி மகன் ஆதி ஆகிய நான்கு பேரை சார்பு ஆய்வாளர் முருக பெருமாள் கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி