தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி மாவட்டம் தேவாரத்தில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அங்குள்ள மருத்துவர்களின் வருகை பதிவேடு மற்றும் ஊழியர்களின் மருத்துவ பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பிரசவ வார்டில் இன்று பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் பதிவேடுகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.