தேனி மாவட்டம் சின்னமனூர் அருள்மிகு லட்சுமி நாராயணன் பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர், நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, பஞ்சாப் முத்துக்குமார், அறநிலை துறை நதியா மற்றும் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.