போடி அருகேயுள்ள குரங்கணி நரிப்பட்டி மலை கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (23) என்பவர், தனது அண்ணன் சூர்யாவின் சட்டையை அணிந்து சென்றதால் ஏற்பட்ட தகராறில், அண்ணனால் கண்டித்து தாக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த நந்தகுமார், வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி, சனிக்கிழமை ஒரு தனியார் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.