பெரியகுளம்: தலையை உடைத்து ரகளை செய்த இளைஞர்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த துர்கா தேவி, தனது கணவர் கபிலன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக பெரியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கபிலன், காவல் நிலையம் முன்பு கிடந்த கண்ணாடியால் தனது தலையை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி