அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் சரண்யா. சற்று மனநலம் குன்றிய இவரை கணவர் கைவிட்டு சென்றார். தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த சரண்யா சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே விறகு அடுப்பில் சுடு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக நைட்டியில் தீ பற்றி உடல் கருகிய நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்