இந்நிலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதற்கிடையே கீழவடகரை ஊராட்சி சார்பில் கும்பக்கரை அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வாகனங்களும் கட்டணமின்றி செல்லலாம் என்று கீழவடகரை ஊராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் தெரிவித்தார்.
தேவையான நேரத்தில் சிறப்பாக விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்