தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற டெம்போ ட்ராவலர் வேன், பெரியகுளம் அருகே எ. புதுப்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. வாகனத்தின் முன் பகுதியில் புகை வந்ததை அடுத்து, ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, அதில் பயணித்த 15 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், வேன் முழுவதும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்தது.