தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ. புதுப்பட்டி கிராமத்தில் மாயகிருஷ்ணன் (40) மற்றும் அவரது மனைவி பிரியா (37) ஆகியோர் வீட்டில் இருந்தபோது, பத்திரிக்கை வைப்பதாக வந்த இரு இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் தம்பதியை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.