தேனி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

தேனி அருகே குன்னூர் டோல்கேட் அருகே ஆண்டிபட்டி பகுதியிலிருந்து தேனி நோக்கி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. லாரி கவிழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. கானா விலக்கு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி