தேனி மாவட்டம் போடி தாலுகா போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக வினோபாஜி காலனி அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் அருகே ஆனந்தன், பிரகாஷ், ரவி ஆகியோர் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டாடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.