போடி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் கைது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே துரைராஜபுரம் பகுதியில் வசிக்கும் 12 மற்றும் 14 வயது சகோதரிகள் தங்களுக்கு 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 1098 இலவச புகார் எண்ணில் புகார் தெரிவித்தனர். 

இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் நிவேதினி போடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சூர்யா (25), பாண்டி (23) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி