தேனி: வாலிபர் கொலை.. 2 பேருக்கு குண்டாஸ்

கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜய்(26) என்பவர், கம்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் சகோதரர் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் (எ)பசும்பொன் ஆகியோர் சேர்ந்து அஜயைக் கடந்த மாதம் கொலை செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும், போலீஸ் எஸ்.பி சினேகாபிரியாவின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி