தேனி மாவட்டம் ஆதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் செல்வன் (33) என்பவர், தனது வீட்டை போலியான பத்திரப்பதிவு மூலம் அபகரிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.