போடி அருகே சிலமலை நடுக்காலனியில் வசிக்கும் அருள்கனி (22) என்பவர், தனது கணவர் காளிமுத்து (28) தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவுக்கு பணம் தராமல் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அருள்கனியின் புகாரை அடுத்து, போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.