தேனி நகர் ரூ. 57,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தேனி நகர் போலீசார் குற்ற தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவராம் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவர்களிடம் சுமார் 57,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, முத்து (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி