தேனி: கொலை வழக்கு.. நான்கு பேர் கைது

தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த ராஜ்குமார் (55) கொலை செய்யப்பட்ட வழக்கில், கம்பத்தைச் சேர்ந்த முகமது சிராஜூதீன், கமுதி அருகே ராமர் (36), மதுரை கருணா மணி (35), தூத்துக்குடி முனியசாமி (36) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 7ம் தேதி ராஜ்குமார் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி