தேனி அரசு பள்ளியின் மேற்கூரை சுவர் விழுந்து சேதம்

தேனி அருகே அரண்மனைபுதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் ஒரு வகுப்பறையின் மேற்கூரை சுவர் திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, மாணவர்கள் யாரும் அந்த நேரத்தில் வகுப்பறையில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி