தேனி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் மீது போக்சோ

பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சதீஷ் (20) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி