தேனி அருகே 2017 பிப்ரவரி 6 அன்று பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத 11 வயது சிறுவனை கடத்தி, பெங்களூருவில் குழந்தை தொழிலாளியாக வேலைக்குச் சேர்த்த வழக்கில், முருகன் (57), பாண்டி (57) ஆகிய இருவருக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஏற்கனவே சிறையில் இருக்கும் இருவருக்கும் தற்போது தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.