போடி அருகே பாலார்பட்டியில் மேளதாளம் முழங்க மாணவர்கள் வரவேற்பு தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பாலார்பட்டி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கை செய்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று (ஜூன் 02) மேளதாளம் முழங்க வரவேற்றனர். இந்நிகழ்வில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தலைப்பாகை அணிவித்து மாட்டு வண்டியில் ஏற்றி பள்ளி வரை ஊர்வலமாக மாணவர்களை அழைத்துச் சென்றனர்