தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புரட்சி பாரதம் கட்சியினர், எஸ்.டி.ஏ பள்ளி பெரியகுளம் முதல்வர் மற்றும் தேனி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் ஆகியோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை சரியாக அமல்படுத்தாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலத் துணைச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் மலை ராஜா, சின்னச்சாமி மூர்த்தியார் பேரவை மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.