பெரியகுளம் அருகே சிறுத்தையை பிடிக்க கோரிக்கை

பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலை அடிவாரத்தில் சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் 10 நாய்களை சிறுத்தை வேட்டையாடியுள்ளது. நேற்றும் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி