தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, வாடிப்பட்டி, மஞ்சளாறு அணை போன்ற பகுதிகளில் நேற்று (மே 16) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வேளையில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் இந்த திடீர் மலை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் மற்றும் குடிநீர் பற்றாக்குறை அகலும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.