தேனி மாவட்டம் போடிமெட்டு மற்றும் போடிமெட்டு மலைச்சாலையில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துள்ளது. சூறாவளிபோல் பலத்த காற்று வீசி வருவதால் மலைச்சாலையில் உள்ள மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மழைச்சாலையில் செல்பி எடுக்கவோ வாகனங்களை நிறுத்தவும் கூடாது என்று குரங்கணி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.